Tuesday, September 3, 2019

IIT JEE Main JEE Advanced

JEE Main என்பது NIT(National Institute of Technology), IIIT, CFTi போன்ற கல்லூரிகளில் பொறியியல் படிக்க கண்டிப்பாக எழுத வேண்டிய நுழைவுத் தேர்வு.

மேலும், JEE ADV தேர்வெழுத்துவதற்கான முதல் படியும் இதுவே. JEE MAIN தேர்வில் முதல் 2,45,000 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களே JEE ADV எழுத தகுதி பெறுகிறார்கள். JEE ADV நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களே IIT(Indian Institute of Technology) யில் சேருவதற்கு தகுதி பெறுகிறார்கள்.

2019ம் வருடத்தில் இருந்து JEE Main நுழைவுத் தேர்வை இரண்டு முறை எழுதும் வாய்ப்பை இந்திய அரசு துவங்கி உள்ளது. அதாவது 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஜனவரி மாதத்தில் ஒரு முறையும், ஏப்ரல் மாதத்தில் ஒரு முறையும் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். மாணவர்கள் இரண்டு முறையும் எழுதலாம், ஒரு முறையும் எழுதலாம். எந்த தேர்வில் மதிப்பெண் அதிகம் பெற்றிருக்கிறாரோ அதையே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும்.

மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் மற்ற மாணவர்கள் எடுத்திருக்கும் மதிப்பெண்ணைப் பொருத்து பட்டியலிடப்படுகிறது. அதாவது 100 பேர் தேர்வு எழுதி உள்ளார்கள் எனில் அதில் நீங்கள் எத்தனையாவது மதிப்பெண் பெற்றுஇருக்கிறீர்கள் என்பதற்கேற்ப நீங்கள் மதிப்பெண் பட்டியலில் இடம் பெறுவீர்கள். உதாரணத்திற்கு, 100 பேர் இந்த முறை தேர்வு எழுதி உள்ளார்கள்  என்று வைத்துக் கொள்ளுங்கள், ராகுல் 100 மதிப்பெண்  பெற்றிருக்கிறார், சிபி 97 மதிப்பெண் பெற்றிருக்கிறார், உங்கள்(லதா) மதிப்பெண் 95 என்றால், மதிப்பெண் பட்டியலில் கீழ்கண்டவாறு இருக்கும்:
ராகுல்   100
சிபி         99
லதா      98

12ம் வகுப்பில் எதிர்கொள்ள இருக்கும் நுழைவுத் தேர்வுகள்!

12ம் வகுப்பில் எதிர்கொள்ள இருக்கும் நுழைவுத் தேர்வுகளைப் பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.

கணிதத்தை ஒரு பாடமாக எடுத்து படித்த மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள்.

Application Starting Month: ஜூலை
Exam Name: KVPY SX
Exam Month: நவம்பர்
Websitehttp://www.kvpy.iisc.ernet.in/main/index.htm
எதற்காக இந்த தேர்வு? IISc Bangalore, IISER(Indian Institutes of Science Education and Research) இந்தியா முழுவதும் 7 இடங்களில் உள்ளது.

Application Starting Month: அக்டோபர்
Exam Name: UCEED
Exam Month: ஜனவரி
Website: https://uceedapp.iitb.ac.in/UCEED/home.jsp
எதற்காக இந்த தேர்வு? B. Des programme at IIT Bombay, IIT Guwahati, IIT Hyderabad and IIITDM Jabalpur

Application Starting Month: நவம்பர்
Exam Name: JEE MAIN
Exam Month: ஜனவரி, ஏப்ரல்
JEE Website: https://jeemain.nta.nic.in/webinfo/public/home.aspx
இந்த வருடத்தில் இருந்து இரண்டு முறை மாணவர்கள் எழுதலாம்.
எதற்காக இந்த தேர்வு?NIT, IIIT, CFTI, மற்றும் JEE ADV எழுதுவதற்கான தகுதியான நுழைவுத் தேர்வு.


Application Starting Month: மார்ச் 
Exam Name: IIM, Indore
Exam Month: May
Website: https://www.iimidr.ac.in/academic-programmes/five-year-integrated-programme-in-management-ipm/
எதற்காக இந்த தேர்வு? 5 வருட MBA course நேரடியாக சேருவதற்கான நுழைவுத் தேர்வு. இந்தியாவில் எந்த IIM இல்லாத course.

Application Starting Month: பிப்ரவரி, மார்ச் 
Exam Name: BITSAT
Exam Month: May
Website: https://www.bitsadmission.com
எதற்காக இந்த தேர்வு? BITS Pilani, Goa, Hyderabad, Dubai ஆகிய இடங்களில் என்ஜினீயரிங் course படிக்க நுழைவுத் தேர்வு.


Application Starting Month: மார்ச், ஏப்ரல்
Exam Name: IIIT Hyderabad
Exam Month: ஏப்ரல் 
Website: http://ugadmissions.iiit.ac.in/index.html
எதற்காக இந்த தேர்வு? 6 விதமான வழியில் அட்மிஷன் இருக்கிறது 

Application Starting Month: April
Exam Name: IISER
Exam Month: ஜூன் 
Website: https://www.iiseradmission.in/
எதற்காக இந்த தேர்வு? இந்தியாவில் 7 இடங்களில BS-MS படிப்பதற்கான நுழைவுத் தேர்வு. JeeAdv, KVPY ஆகிய தேர்வுகள் மூலமாகவும் சேரலாம்.


Application Starting Month: ஏப்ரல் 
Exam Name: CMI(Chennai Mathematical Institute)
Exam Month: May
Website: https://www.cmi.ac.in/admissions/
எதற்காக இந்த தேர்வுகணிதத்திற்கு ஒரு நுழைவுத் தேர்வு.


Application Starting Month: April, May
Exam Name:  physics maths +2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்தவர்களை, online test, interview
Exam Month: June
Website: www.psgtech.edu
எதற்காக இந்த தேர்வுFive Year Integrated M.Sc (SS / TCS / DS / FD&M) 

Application Starting Month: மே
Exam Name: SSN
Exam Month: May
Website: http://www.ssn.edu.in/?page_id=26
எதற்காக இந்த தேர்வு?

Application Starting Month: மே
Exam Name: JEE Adv
Exam Month: May
Website: https://jeeadv.ac.in/
எதற்காக இந்த தேர்வு? நீங்கள் முதலில் JEE MAIN ல் தேர்வாகி இருக்க வேண்டும். 23 IIT ல் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு.

உயிரியலை ஒரு பாடமாக எடுத்து படித்த மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வுகள்.


Application Starting Month: நவம்பர்
Exam Name: NEET
Exam Month: May
Website: https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx
எதற்காக இந்த தேர்வு? MBBS டாக்டர் 


Application Starting Month:
Exam Name: AIIMS
Exam Month: May
Website: http://mbbs.aiimsexams.org/
எதற்காக இந்த தேர்வுMBBS டாக்டர் 


Application Starting Month: மார்ச்
Exam Name:JIPMER 
Exam Month: ஜூன் 
Website: http://www.jipmer.edu.in/
எதற்காக இந்த தேர்வுMBBS டாக்டர்

Tuesday, April 16, 2019

பெற்றோர்களே உங்களை முதலில் தயார் செய்யுங்கள்!

முதல் குறி!

இப்பப் பாத்தீங்கன்னா மருத்துவம், பொறியியல் வேண்டாம் வேற ஏதாவது வித்யாசமா படிக்கலாம், இல்லை அரசுத் துறை அலுவல்களில் சேரலாமா என்ற எண்ணம் தற்போது சில வருடங்களாகவே உருவாகி விட்டது.

நன்கு படிக்கின்ற குழந்தைகளை ஏன் ஒரு மருத்துவராக அல்லது ஒரு நல்ல பொறியியல் வல்லுனராக ஆக கூடாது. அந்த துறைகள் எப்போதும் நன்றாகவே இருக்கிறது.

சில குரூப் 60 முதல் 80 அரசு துறை நுழைவுத் தேர்வுகள் இருக்கு. 20 முதல் 40 பரிட்சைகளையாவது எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு நல்ல பிரிவில் சேரலாம் என்று கிளம்பி இருக்கிறது.

11, 12 ஆகிய வகுப்புகள் வாழ்க்கையில் கடினமான ஒரு கால கட்டம். எப்போதும் குழந்தை பருவத்தில் இருந்து அடுத்த பருவத்திற்கும், இளமை பருவத்தில் இருந்து அடுத்த பருவத்திற்கும், இப்படி ஒவ்வொரு பருவ மாற்றத்தின் போது நாம்  உடல் மற்றும் மனம் ரீதியான நிறைய சவால்களை சந்திக்க நேரிடுகிறது.  அதை உணர்ந்து நம் குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டிராமல், அவர்களுக்கு எது தேவையோ அதை நம்மால் முடிந்த அளவு உதவியாக எல்லா விதத்திலும் கைகோர்க்க  வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் குழந்தைக்கு திட்டமிட்டு தாமாக படிப்பது சிரமம் என்று நினைத்தால், நீங்கள் இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள். அதை பின்பற்றுகிறார்களா என்று தினமும் பின் தொடர்ந்து கவனியுங்கள். பின்பற்றினால் அதை உற்சாகப் படுத்துங்கள். தவறினால் பொறுமையாக அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து அடுத்த படி எடுத்து வைக்க உதவுங்கள். 

நம்முடைய ஒத்துழைப்பு 200சதம்  இருந்தால் பிள்ளைகள் நிச்சயம் சிறுக சிறுக முன்னேறுவார்கள். 

முதலில் ஒரு சிறந்த இலக்கை தேர்ந்தெடுங்கள். எந்த இலக்காக இருந்தாலும் அதை அடைய  முழு மூச்சாக இறங்குங்கள். நீங்கள் இறங்கி விட்டால், உங்கள் பிள்ளைகள் தானாக உங்களை பின்பற்றுவார்கள். 

Think Big!

Thursday, April 11, 2019

முன்னுரை

என்னை நல்ல பெண்ணாக வளர்த்த என் பெற்றோருக்கும்,
திருமணத்திற்குப் பிறகு என்னை வளர்த்துக் கொண்டிருக்கிற
என் கணவருக்கும் இப்போது என் குடும்பம் ஆகிவிட்டவர்களுக்கும்,
மற்றும் நான் பிறந்ததில் இருந்து சந்தித்த-சந்தித்து கொண்டிருக்கிற
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த கோடி நன்றிகளும்
வணக்கங்களும் சமர்ப்பணம்.


என் உலகம் என் மகள்கள்…


அவர்களுக்கு தேவையானவரை என்னை ஆரோக்கியமாகவும்,
உற்சாகத்துடனும் வைத்திருக்க நிதம் வேண்டி விரும்புகிறேன்.

சரி விசயத்திற்கு வருவோம்…


ஆண் பெண் பேதமின்றி அனைவர்க்கும் கல்வி, அனைவரும் படித்து
நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்.
அதுவும் இன்னும் நகரபுரத்திற்கு வராத மக்களின் வேட்கை
அதிகமாகவே இருக்கிறது.


பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, மேற்படிப்பு பற்றி
தீவிரமாக யோசித்து அதற்கான கோச்சிங் சென்டர் தேடி அலைய
ஆரம்பித்து விடுகிறோம். அதற்கு ஒரு எண்ட்ரன்ஸ் எக்ஸாம்.
அதுவே உங்கள் பிள்ளைக்கு தகுதி இருக்கிறதா என்று உணர வைக்கும்
ஒரு தேர்வு. அதற்கும் தனி கோச்சிங்  கொடுத்து, எண்ட்ரன்ஸ் எக்ஸாம்மில்
நல்ல மதிப்பெண் எடுக்க வைக்க அவர்கள் விளையாடும் நேரத்தை
வீணடித்து குறைவான கட்டணத்தில் பிள்ளைகளை விரும்பியோ,
விருப்பமில்லாமலோ, குழம்பியோ, தெளிவாகவோ சேர்க்கிறார்கள்.


அடுத்த நிலை எட்டாம் வகுப்பு படித்து முடிக்கும் முன்!
நாளைக்கே உங்கள் பிள்ளை கலெக்டர் ஆவது போல இருக்கும் அனைத்து
விதமான கோர்ஸ்களையும் அலசி ஆராய்ந்து, அவர்களும் குழம்பி,
பிள்ளைகளையும் குழப்பி, இன்றோடு உலகம் முழுகப்போவது போல
ஒரு career வேட்க்கை பெற்றோரை தொத்திக்கொள்கிறது.


இங்கே பெற்றோர்களுக்கு…


உங்கள் மனதில் உதிக்கும் சந்தேகங்களுக்கு என்னால் முடிந்த விடை
தர முயல்கிறேன்.


உங்கள் நிலையில் நான் இருந்த போது நான் படித்த படிப்பைத் தவிர  எந்த
அறிவும் எனக்கு இல்லை. இன்று இரவு என்ன குழம்பு வைக்கலாம்,
நாளைக்கு காலையில் என்ன சமையல் செய்யலாம், என்பதிலேயே
பாதி நேரம் கழிந்து விடுகிறது. யாரை கேட்க வேண்டும், எதைக் கேட்க
வேண்டும் என்பதே பெரும் கேள்வியாக இருந்தது.


முதலில் யூடூபில் வரும் அனைத்து கல்வி சார்ந்த வீடியோகளையும்
அலசுவது. பிறகு அவர்கள் குறிப்பிட்டது உண்மையா என்று அந்த
அந்த வெப்சைட் சென்று ஆராய்வது. மக்கள் அதைப் பற்றி என்ன
சொல்கிறார்கள் என்று அலசுவது. வீட்டில் இருப்பவர்களிடம்
அதைப் பற்றியே பேசி மொக்கை போடுவது. நாமும் வீணாகத்தான்
இருக்கிறோமோ என்று ஐய்யம் கொண்டு, ஏதாவது செய்ய முனைவது.
மேலும், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாரிடம் வேண்டுமானாலும்
information சேகரிப்பது என கடந்த நான்கு வருடங்களை நகர்த்தி விட்டேன்.


கொஞ்சம் விஷயத்திற்கு வருகிறேன்,

எப்போதும் படித்துக் கொண்டிருப்பது, வீட்டிற்கு யார் வந்தாலும்கூட
படிப்பதையே விருப்பமாக கொண்டிருக்கும் குழந்தைகள்;


வீட்டில் எப்போதும் உற்சாகத்துடன், விருந்தினரை கண்டால் மிக
மகிழ்ச்சியோடு, புதியவராக இருந்தாலும் எளிதில் பழகக்கூடிய
குழந்தைகள்;


படிக்கவும் பிடிக்காது, மற்றவர்களுடன் உறவாடவும் பிடிக்காது,
ஏதாவது ஒன்றை உருவாக்கும் விதம் - எப்பப்பாரு ஏதாவது ஒன்றை
வைத்துக்கொண்டு நோண்டிக் கொண்டே இருப்பது என்ற
இயல்புடைய குழந்தைகள்;


இப்படி குழந்தைகளை இந்த மூன்று வகைகளினுள் எளிதாக
புகுத்திவிடலாம். சிலரிடம் முதல் பண்பு அதிகமாக இருக்கும்,
இரண்டாம் பண்பு மந்தமாக இருக்கும், மூன்றாம் பண்பும் நன்றாகவே
இருக்கும். சிலரிடம் இரண்டாம் பண்பு மட்டுமே இருக்கும்.
இப்படி குழந்தைகளின் இயற்கையான குணமறிந்து அவர்களுக்கு
காலமெல்லாம் உறுதுணையாக நல்ல மனிதர்களாக தனித்து
நிற்கும் படியாக நம் செயல்கள் அமைய வேண்டும்.


மருத்துவம், பொறியியல் இரண்டுமே ரொம்ப கஷ்டம்பா,
எல்லோரும் அதை நோக்கியே போறாங்க. நமக்கு அதெல்லாம்
ஒத்து வராது. வித்தியாசமா ஏதாவது பண்ணலாம் என்று தான்
ஆரம்பிக்கிறோம்… கரெக்ட்டா?


ம்ம்ம்ம்ம்ம்….. அப்புறம்….