முதல் குறி!
நன்கு படிக்கின்ற குழந்தைகளை ஏன் ஒரு மருத்துவராக அல்லது ஒரு நல்ல பொறியியல் வல்லுனராக ஆக கூடாது. அந்த துறைகள் எப்போதும் நன்றாகவே இருக்கிறது.
சில குரூப் 60 முதல் 80 அரசு துறை நுழைவுத் தேர்வுகள் இருக்கு. 20 முதல் 40 பரிட்சைகளையாவது எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு நல்ல பிரிவில் சேரலாம் என்று கிளம்பி இருக்கிறது.
இப்பப் பாத்தீங்கன்னா மருத்துவம், பொறியியல் வேண்டாம் வேற ஏதாவது வித்யாசமா படிக்கலாம், இல்லை அரசுத் துறை அலுவல்களில் சேரலாமா என்ற எண்ணம் தற்போது சில வருடங்களாகவே உருவாகி விட்டது.
நன்கு படிக்கின்ற குழந்தைகளை ஏன் ஒரு மருத்துவராக அல்லது ஒரு நல்ல பொறியியல் வல்லுனராக ஆக கூடாது. அந்த துறைகள் எப்போதும் நன்றாகவே இருக்கிறது.
சில குரூப் 60 முதல் 80 அரசு துறை நுழைவுத் தேர்வுகள் இருக்கு. 20 முதல் 40 பரிட்சைகளையாவது எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு நல்ல பிரிவில் சேரலாம் என்று கிளம்பி இருக்கிறது.
11, 12 ஆகிய வகுப்புகள் வாழ்க்கையில் கடினமான ஒரு கால கட்டம். எப்போதும் குழந்தை பருவத்தில் இருந்து அடுத்த பருவத்திற்கும், இளமை பருவத்தில் இருந்து அடுத்த பருவத்திற்கும், இப்படி ஒவ்வொரு பருவ மாற்றத்தின் போது நாம் உடல் மற்றும் மனம் ரீதியான நிறைய சவால்களை சந்திக்க நேரிடுகிறது. அதை உணர்ந்து நம் குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டிராமல், அவர்களுக்கு எது தேவையோ அதை நம்மால் முடிந்த அளவு உதவியாக எல்லா விதத்திலும் கைகோர்க்க வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் குழந்தைக்கு திட்டமிட்டு தாமாக படிப்பது சிரமம் என்று நினைத்தால், நீங்கள் இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள். அதை பின்பற்றுகிறார்களா என்று தினமும் பின் தொடர்ந்து கவனியுங்கள். பின்பற்றினால் அதை உற்சாகப் படுத்துங்கள். தவறினால் பொறுமையாக அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து அடுத்த படி எடுத்து வைக்க உதவுங்கள்.
நம்முடைய ஒத்துழைப்பு 200சதம் இருந்தால் பிள்ளைகள் நிச்சயம் சிறுக சிறுக முன்னேறுவார்கள்.
முதலில் ஒரு சிறந்த இலக்கை தேர்ந்தெடுங்கள். எந்த இலக்காக இருந்தாலும் அதை அடைய முழு மூச்சாக இறங்குங்கள். நீங்கள் இறங்கி விட்டால், உங்கள் பிள்ளைகள் தானாக உங்களை பின்பற்றுவார்கள்.
Think Big!
No comments:
Post a Comment