Tuesday, April 16, 2019

பெற்றோர்களே உங்களை முதலில் தயார் செய்யுங்கள்!

முதல் குறி!

இப்பப் பாத்தீங்கன்னா மருத்துவம், பொறியியல் வேண்டாம் வேற ஏதாவது வித்யாசமா படிக்கலாம், இல்லை அரசுத் துறை அலுவல்களில் சேரலாமா என்ற எண்ணம் தற்போது சில வருடங்களாகவே உருவாகி விட்டது.

நன்கு படிக்கின்ற குழந்தைகளை ஏன் ஒரு மருத்துவராக அல்லது ஒரு நல்ல பொறியியல் வல்லுனராக ஆக கூடாது. அந்த துறைகள் எப்போதும் நன்றாகவே இருக்கிறது.

சில குரூப் 60 முதல் 80 அரசு துறை நுழைவுத் தேர்வுகள் இருக்கு. 20 முதல் 40 பரிட்சைகளையாவது எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு நல்ல பிரிவில் சேரலாம் என்று கிளம்பி இருக்கிறது.

11, 12 ஆகிய வகுப்புகள் வாழ்க்கையில் கடினமான ஒரு கால கட்டம். எப்போதும் குழந்தை பருவத்தில் இருந்து அடுத்த பருவத்திற்கும், இளமை பருவத்தில் இருந்து அடுத்த பருவத்திற்கும், இப்படி ஒவ்வொரு பருவ மாற்றத்தின் போது நாம்  உடல் மற்றும் மனம் ரீதியான நிறைய சவால்களை சந்திக்க நேரிடுகிறது.  அதை உணர்ந்து நம் குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டிராமல், அவர்களுக்கு எது தேவையோ அதை நம்மால் முடிந்த அளவு உதவியாக எல்லா விதத்திலும் கைகோர்க்க  வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் குழந்தைக்கு திட்டமிட்டு தாமாக படிப்பது சிரமம் என்று நினைத்தால், நீங்கள் இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள். அதை பின்பற்றுகிறார்களா என்று தினமும் பின் தொடர்ந்து கவனியுங்கள். பின்பற்றினால் அதை உற்சாகப் படுத்துங்கள். தவறினால் பொறுமையாக அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து அடுத்த படி எடுத்து வைக்க உதவுங்கள். 

நம்முடைய ஒத்துழைப்பு 200சதம்  இருந்தால் பிள்ளைகள் நிச்சயம் சிறுக சிறுக முன்னேறுவார்கள். 

முதலில் ஒரு சிறந்த இலக்கை தேர்ந்தெடுங்கள். எந்த இலக்காக இருந்தாலும் அதை அடைய  முழு மூச்சாக இறங்குங்கள். நீங்கள் இறங்கி விட்டால், உங்கள் பிள்ளைகள் தானாக உங்களை பின்பற்றுவார்கள். 

Think Big!

Thursday, April 11, 2019

முன்னுரை

என்னை நல்ல பெண்ணாக வளர்த்த என் பெற்றோருக்கும்,
திருமணத்திற்குப் பிறகு என்னை வளர்த்துக் கொண்டிருக்கிற
என் கணவருக்கும் இப்போது என் குடும்பம் ஆகிவிட்டவர்களுக்கும்,
மற்றும் நான் பிறந்ததில் இருந்து சந்தித்த-சந்தித்து கொண்டிருக்கிற
அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த கோடி நன்றிகளும்
வணக்கங்களும் சமர்ப்பணம்.


என் உலகம் என் மகள்கள்…


அவர்களுக்கு தேவையானவரை என்னை ஆரோக்கியமாகவும்,
உற்சாகத்துடனும் வைத்திருக்க நிதம் வேண்டி விரும்புகிறேன்.

சரி விசயத்திற்கு வருவோம்…


ஆண் பெண் பேதமின்றி அனைவர்க்கும் கல்வி, அனைவரும் படித்து
நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம்.
அதுவும் இன்னும் நகரபுரத்திற்கு வராத மக்களின் வேட்கை
அதிகமாகவே இருக்கிறது.


பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, மேற்படிப்பு பற்றி
தீவிரமாக யோசித்து அதற்கான கோச்சிங் சென்டர் தேடி அலைய
ஆரம்பித்து விடுகிறோம். அதற்கு ஒரு எண்ட்ரன்ஸ் எக்ஸாம்.
அதுவே உங்கள் பிள்ளைக்கு தகுதி இருக்கிறதா என்று உணர வைக்கும்
ஒரு தேர்வு. அதற்கும் தனி கோச்சிங்  கொடுத்து, எண்ட்ரன்ஸ் எக்ஸாம்மில்
நல்ல மதிப்பெண் எடுக்க வைக்க அவர்கள் விளையாடும் நேரத்தை
வீணடித்து குறைவான கட்டணத்தில் பிள்ளைகளை விரும்பியோ,
விருப்பமில்லாமலோ, குழம்பியோ, தெளிவாகவோ சேர்க்கிறார்கள்.


அடுத்த நிலை எட்டாம் வகுப்பு படித்து முடிக்கும் முன்!
நாளைக்கே உங்கள் பிள்ளை கலெக்டர் ஆவது போல இருக்கும் அனைத்து
விதமான கோர்ஸ்களையும் அலசி ஆராய்ந்து, அவர்களும் குழம்பி,
பிள்ளைகளையும் குழப்பி, இன்றோடு உலகம் முழுகப்போவது போல
ஒரு career வேட்க்கை பெற்றோரை தொத்திக்கொள்கிறது.


இங்கே பெற்றோர்களுக்கு…


உங்கள் மனதில் உதிக்கும் சந்தேகங்களுக்கு என்னால் முடிந்த விடை
தர முயல்கிறேன்.


உங்கள் நிலையில் நான் இருந்த போது நான் படித்த படிப்பைத் தவிர  எந்த
அறிவும் எனக்கு இல்லை. இன்று இரவு என்ன குழம்பு வைக்கலாம்,
நாளைக்கு காலையில் என்ன சமையல் செய்யலாம், என்பதிலேயே
பாதி நேரம் கழிந்து விடுகிறது. யாரை கேட்க வேண்டும், எதைக் கேட்க
வேண்டும் என்பதே பெரும் கேள்வியாக இருந்தது.


முதலில் யூடூபில் வரும் அனைத்து கல்வி சார்ந்த வீடியோகளையும்
அலசுவது. பிறகு அவர்கள் குறிப்பிட்டது உண்மையா என்று அந்த
அந்த வெப்சைட் சென்று ஆராய்வது. மக்கள் அதைப் பற்றி என்ன
சொல்கிறார்கள் என்று அலசுவது. வீட்டில் இருப்பவர்களிடம்
அதைப் பற்றியே பேசி மொக்கை போடுவது. நாமும் வீணாகத்தான்
இருக்கிறோமோ என்று ஐய்யம் கொண்டு, ஏதாவது செய்ய முனைவது.
மேலும், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாரிடம் வேண்டுமானாலும்
information சேகரிப்பது என கடந்த நான்கு வருடங்களை நகர்த்தி விட்டேன்.


கொஞ்சம் விஷயத்திற்கு வருகிறேன்,

எப்போதும் படித்துக் கொண்டிருப்பது, வீட்டிற்கு யார் வந்தாலும்கூட
படிப்பதையே விருப்பமாக கொண்டிருக்கும் குழந்தைகள்;


வீட்டில் எப்போதும் உற்சாகத்துடன், விருந்தினரை கண்டால் மிக
மகிழ்ச்சியோடு, புதியவராக இருந்தாலும் எளிதில் பழகக்கூடிய
குழந்தைகள்;


படிக்கவும் பிடிக்காது, மற்றவர்களுடன் உறவாடவும் பிடிக்காது,
ஏதாவது ஒன்றை உருவாக்கும் விதம் - எப்பப்பாரு ஏதாவது ஒன்றை
வைத்துக்கொண்டு நோண்டிக் கொண்டே இருப்பது என்ற
இயல்புடைய குழந்தைகள்;


இப்படி குழந்தைகளை இந்த மூன்று வகைகளினுள் எளிதாக
புகுத்திவிடலாம். சிலரிடம் முதல் பண்பு அதிகமாக இருக்கும்,
இரண்டாம் பண்பு மந்தமாக இருக்கும், மூன்றாம் பண்பும் நன்றாகவே
இருக்கும். சிலரிடம் இரண்டாம் பண்பு மட்டுமே இருக்கும்.
இப்படி குழந்தைகளின் இயற்கையான குணமறிந்து அவர்களுக்கு
காலமெல்லாம் உறுதுணையாக நல்ல மனிதர்களாக தனித்து
நிற்கும் படியாக நம் செயல்கள் அமைய வேண்டும்.


மருத்துவம், பொறியியல் இரண்டுமே ரொம்ப கஷ்டம்பா,
எல்லோரும் அதை நோக்கியே போறாங்க. நமக்கு அதெல்லாம்
ஒத்து வராது. வித்தியாசமா ஏதாவது பண்ணலாம் என்று தான்
ஆரம்பிக்கிறோம்… கரெக்ட்டா?


ம்ம்ம்ம்ம்ம்….. அப்புறம்….